Designed by Iniyas LTD
பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம்!
தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான பௌத்த இனவாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்திய போதும் எந்தப் பயனும் கிடைப்பதில்லை.
அந்தவகையில் கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளையார் ஆலைய தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஸ்ரீலங்கா போலீசாரின் ஒத்துழைப்புடன் பௌத்த தேரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை தமிழர்கள் மத்தியில்
பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த அடாவடி சம்பவத்தினை கண்டித்து மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தங்கள் எதிர்ப்பினை பெரும் போராட்டத்தின் மூலம் வெளிக் காட்டினார்கள்.
அந்தவகையில் புதன்கிழமை (02.09.2019) அன்று பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கூறியதாவது ..இந்த நாடு தனிச்சிங்கள நாடு..முல்லைத்தீவு தங்கள் பிரதேசம் அங்கு எமது சிங்கள மக்கள் வாழ முடியாமல் உள்ளனர். ஒரு தேரரின் உடலைக்கூட அடக்கம் செய்ய முட்டியவில்லை
எனவே சிங்கள மக்களே விழித்திருங்கள் என தனது இனத்துவேசத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







