தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மீது சிங்கள சிறை அதிகாரிகள் தாக்குதல்!

மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதியொருவர் சிறைச்சாலை காவலர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த வேலாயுதம் வரதராஜன்(வயது 39) என்பவர் மீதே சிறைக் காவலர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதையடுத்து சிறைச்சாலையின் வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சக அரசியல் கைதிகளால் குடும்பத்தவர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கினில் சிங்கள சிறை அலுவலர்களால் தாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற போதும் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.

Comments
Loading...