Designed by Iniyas LTD
மகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் உடனடியாக விவாகரத்து தருமாறு கோரிய மணமகன்
எகிப்து நாட்டில் திருமண வீடொன்றில் மகளுடன் பேசுவதற்கு தாயார் அனுமதி கேட்டதால் தனக்கு உடனடியாக விவாகரத்து தருமாறு மணமகன் கோரியுள்ள சம்பவமொன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டில் புறநகர் பகுதி ஒன்றில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் இருவரும் தங்கள் வாகனத்தில் புறப்பட தயாராக இருந்தபோது, மணமகளின் தாயார் தனது மகளுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும் என மருமகனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மணமகன், இதுவரை அனைத்து நாளும் அவள் உங்களுடனே தானே இருந்தாள், தற்போது அவளிடம் பிரியாவிடை கூற வேண்டிய அவசியம் இல்லை எனச் சத்தமிட்டு கத்தியுள்ளார்.
இந்த களேபரத்தை கண்டு மணமகளின் மாமனார் ஒருவர் மணமகனை அணுகி சமாதானம் செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சியும் வீணானது. இதனிடையே கோபத்தில் அலறிய மணகன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து , தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. விவாகரத்து உடனே வேண்டும் என கூறியுள்ளார்.
மணமகனின் இந்த பேச்சை கேட்ட மணமகள் குடும்பத்தினர் அடிதடியில் இறங்கியதால் இரு குடும்பத்தினருக்கும் இடையில் சண்டையில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.