Designed by Iniyas LTD
மகிந்தவிடம் விசாரணை மேற்கொண்டமைக்கு கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு…
மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றமைக்கு கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிகப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மினுவாங்கொட பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று உடுகம்பொல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு இன்று சபைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.