தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தவை சித்திரவதை செய்ய கூகுளில் புதிய வசதி!

ffffff-310x165-300x233தற்போது கூகுளின் வழியாக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மனம் விரும்பியவாறு சித்திரவதைப்படுத்தும் வகையில் புதிய அப்ளிகேஷன் ஒன்று கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுள்ளது.

இவரை சித்திரவதைப்படுத்துங்கள் எனும் தலைப்பில் மஹிந்தவின் உருவத்துக்கு சமமான உருவம் ஒன்று இதில் காட்டப்பட்டுள்ளது.

தமக்கு விருப்பமான எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி குறித்த அப்ளிகேஷனில் இருக்கும் மஹிந்தவின் உருவத்தை சித்திரவதைப்படுத்தும் வாய்ப்பு வாசகர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் எந்தவொரு நபரையும் இவ்வாறு சித்திரவதைப்படுத்தி மகிழ்ச்சியுறும் மனப்பாங்கு ஆரோக்கியமான மனிதர்களுக்கு நல்லதல்ல என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் மஹிந்தவுக்கு ஆதரவான பலரும் இது குறித்து கூகுள் நிர்வாகத்துக்கு முறைப்பாடுகளை அனுப்பிக் கொண்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

Comments
Loading...