தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்த அரசாங்கம் பௌத்த சாசனத்தை இராணுவமயப்படுத்துகின்றது – ரணில்

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பௌத்த சாசனத்தை இராணுவமயப்படுத்த ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். சட்டமூலம் தொடர்பில் பௌத்த மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். விகாரை, தேவாலய சட்டமூலத்தின் ஊடாக அவர்கள் அதனை நிறைவேற்றி வருகின்றனர். குறித்த சட்டமூலத்தின் ஊடாக ஜெனரல் ஒருவருக்கு பௌத்த சாசனத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.ranil 654s

யுத்த காலத்திலேயே ஜெனரல்கள் இருக்க வேண்டும். புத்தசாசனத்திற்கு ஜெனரல்கள் அவசியமில்லை. அத்துடன் இந்த சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம், விகாரைகள், ஆலயங்களின் உரிமைகளில் தலையிட நடவடிக்கை எடுக்கின்றது. அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை தோற்கடிக்க அனைத்து பௌத்த மத தலைவர்களையும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளேன் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

Comments
Loading...