Designed by Iniyas LTD
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு….
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளித்துள்ளதாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் என்ற முறையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 46 (1) மற்றும் 48 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் பதவியிலுள்ள பிரதமர் இறந்து போனால் பதவி விலகினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அல்லது அரசாங்க கொள்கை அறிக்கை அல்லது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால்,
அல்லது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே பிரதமர் பதவி வெற்றிடமாகும் எனவும் குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
அந்த வகையில் அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த மீது அவ்வாறு நம்பிக்கையில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.