தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிமை பொருந்திய தமிழர் தைத்திருநாள்! ரணில் வாழ்த்து

showImageInStoryஅனைத்து இலங்கை மக்­க­ளி­னதும் மத,கலா­சார பல்­வ­கைத்­தன்­மையை மதிப்­பீட்­டுக்கு உட்­ப­டுத்தி, கௌரவம் வழங்கி, ஒற்­று­ மை­யாகவும், சக­வாழ்­வு­டனும் வாழ்­வ­தற்குத் தேவை­யான ஒரு சூழல் உரு­வாகிக் கொண்­டி­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தில், தைப்­பொங்கல் திரு­நா­ளா­னது சமத்துவத்துக்கு கௌரவமளிக்கும், நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறையை நோக்கி நகர்வதற்கு நம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்தில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது;

புதிய பிரார்த்­த­னைகள், நோக்­கங்­களைக் கட்­டி­யெ­ழுப்பி வாழ்க்கை குறித்த புதிய எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி எதிர்­கா­லத்தைக் காணக் கிடைக்கும் பெறு­ம­தி­யான சந்­தர்ப்­ப­மாக புது வரு­ட­மொன்றின் ஆரம்­பத்­தினை நான் காண்­கிறேன்.

உலகம் முழு­வ­து­முள்ள தமிழ் மக்கள் தை மாதத்தில் கொண்­டாடும் தைத்­தி­ருநாள் மத, கலா­சார மற்றும் சமூக ரீதி­யாக மிகவும் முக்­கி­ய­மான மகிமை பொருந்­திய ஒரு நாளாகும். அந்த மக்­களின் அறு­வடைத் திரு­நா­ளான இத்­தி­னத்தில் சூரிய வணக்­கத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதால் சூரியத் திரு­நா­ளா­கவும் காணப்­ப­டு­கி­றது. இத்­தி­னத்தில் சூரிய உத­யத்­துடன் தமிழ் மக்­க­ளுக்குப் புத்­தாண்டு பிறக்­கி­றது.

சூரிய பக­வா­னினால் வாழ்­வா­தாரம் வழங்­கப்­ப­டு­வ­தனை நினை­வு­ப­டுத்தி, தமது முத­லா­வது விளைச்­சலை சூரிய பக­வா­னுக்குப் படைப்­பதும், விளைச்­சலை சிறப்­பா­ன­தாக மாற்ற உறு­து­ணையாய் அமைந்த மழை, விலங்­கி­னங்கள் உள்­ள­டங்­க­லாக இயற்­கையின் அருட்­கொ­டை­க­ளுக்கு நன்றி தெரி­விப்­பதும் இத்­தி­னத்தில் இடம்­பெ­று­கி­றது.

Comments
Loading...