தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் கொலைகளுக்கு பின்னால் பெண்களின் வன்கொடுமைகளுக்கு பின்னால் அரசின் மறைமுகங்கள் –சிறிதரன்..

நித்தியகலாவிற்கு நீதிவேண்டி   இந்துபுரம் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில்முறுகண்டிப்பகுதியில் இன்று காலை  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டநாடாளமன்ற உறுப்பினர்  சிறிதரன் தெரிவிக்கையில்..

 முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டியில் பிறந்து வளர்ந்த வசித்துவரும் நித்தியகலா கிளிநொச்சி மாவட்டத்தில் உடலமாக மீட்கப்பட்டார் இதைபோல பல செய்திகள் கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது வித்தியாவில் தொடங்கி சேயா,றெஜினா,நித்தியா என்று பெண்கள் மீதான படுகொலைகளும் வன்முறைகளும் ஈவிரக்கமற்ற மனிதநேயத்தை நேசிக்காதவர்களுடைய மனித குலத்திற்கு எதிரான குற்றக்கொலையினை நாங்கள் அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த நாட்டில் நாங்கள் ஒரு திறந்தவெளிச்சிறைச்சாலையில் நூறுவீதமும் படையினரின் வலைப்பின்னலுக்குள் எங்கள் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

குவிக்கப்பட்டுள்ள பொலீசார்,அதிரடிப்படை,கடற்படை,விமானப்படை என்று எங்கு பார்த்தாலும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த மக்கள் வாழ்கின்ற சூழலில் பெண்கள் இளைஞர்கள்,சிறுமிகள் மீதான தாக்குதல்கள் வன்முறைகள் ஏன் நடைபெறவேண்டும் போர் நடைபெற்ற பிற்பாடு போரில் ஈடுபட்ட சமூகத்தை அவர்களை கேலிக்குரியவர்களாக அவர்களை காட்டுமிராண்டிகளாக காட்டுதவற்கு அவர்களை மனிதநேயம் அற்றவர்களாக காட்டுவதற்கு அரச படைகளே பின்புலத்தில் இருந்து இயக்குவது மிக தெளிவாக தெரிகின்றது

அரசு நினைத்திருந்தால் இந்த விடயங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் திருமுறுகண்டி பிரதேசத்தில் பொலீஸ் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை என்றால் அதற்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றது.

மக்கள் கொலைகளுக்கு பின்னால் பெண்களின் வன்கொடுமைகளுக்கு பின்னால் அரசின் மறைமுகரங்கள் இருக்கின்றது தெளிவாக தெரிகின்றது.

 ஆகவேதான் இந்த நாட்டில் ஒரு சுயாட்சியை எங்களை நாங்கள் ஆழுகின்ற ஒரு ஆட்சிக்கா நாங்கள் பேசுகின்ற காரணங்களும் நியாயத்தன்மைகளையும் உங்களால் புரிந்துகொள்ளமுடியும் இதற்காகத்தான் நாங்கள் போரடுகின்றோம் அரசோடு பேசுகின்றோம் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

ஆனால் இவ்வளவும் நடைபெறும் காலத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம் உரிய இடங்களில் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்.

தொடர்ந்தும் இவ்வாறான துன்பங்கள் நடைபெறக்கூடாது சகோதரிகள் எங்கள் மண்ணில் நின்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும்.

வெறுமனவே நாங்கள் குற்றம் புரிபவர்கள் மீது கவனம் செலுத்தாமல் பெண்களாகிய நாங்களும் ஆண்களும் கூட கவனம் கொள்ளவேண்டும். எங்களுடை பாதுகாப்பில் நாங்களும் சரியாக இருக்கவேண்டும் விளிப்பாக இருக்கவேண்டும்

இந்த இடங்களில் கஞ்சா போதைவஸ்து கூட எம்மவர்கள்தானே கொண்டு வருகின்றார்கள்.

இதற்கு எம்மவர்கள்தான் இதற்கு காரணமாக இருக்கின்றார்கள் கசிப்பு யார்விற்றார்கள் இதனை தடுக்கவேண்டிய கடமையும் கடப்பாடும் யாருக்கு இருக்கின்றது நாங்கள் விளிப்படைந்தால் இலங்கை இராணுவம் அல்ல பொலீஸ் அல்ல இலங்கையின் எந்தபடைகளும் எங்களுக்கு சவாலாக இருக்க முடியாது விளிப்பாக இருங்கள் தெளிவாக இருங்கள் நித்தியா போல இன்னும்ஒரு நித்தியாவிற்கு நடக்கக்கூடாது இது கடைசியாக இருக்கவேண்டும்.

நாங்கள் நாங்களாக வாழ்வதற்கு எங்கள் உரிமைகளை பெற்றக்கொள்வதற்கு ஒரு அணியாக ஒரு இனமாக நாங்கள் வாழ்கின்றசூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

இருப்பவர்கள் இருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா என்ற வாசகத்தினை நாங்கள் பார்க்கின்ற போது உண்மையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த மண்ணில் இருந்திருந்தால் இப்பொழுதே அந்த குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டிருப்பான் ஆனால் ஏன் அவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு எங்களால் சரியாக நடக்கக்கூடாது நாங்கள் ஏன் நீதியாக நடக்கக்கூடாது ,

நீதியான முறையில் நாங்கள் ஏன் பயணிக்ககூடாது ஆகவேதான் கடந்த கால வரலாறுகளை நினைக்கின்ற நாங்கள் அவ்வாறான வாழ்க்கைக்குள் வாழ்ந்தவர்கள் நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்தவர்கள் அந்த வாழ்க்கையினை நாங்கள்தான் கட்டி எழுப்பவேண்டும் உன்னதமான அந்த உணர்வுளோடு ஒரு நித்தியா மீது நீங்கள் சத்தியம் செய்துகொள்ளுங்கள்

இனியும் இவ்வாறு நடக்கக்கூடாது நாங்கள் விளிப்படையவேண்டும் விளிப்புத்தான் இவ்வாறான குற்றங்களை தடுக்கும் என்றும் நாடாளமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...