தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழினத்திற்கு கிடைத்த வெற்றி – காசியானந்தன்!

kasi ananthanமாவீரர்களின் கனவு நனவாகிக்கொண்டிருக்கும் ஒரு காலத்தினை நோக்கி நாங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றோம் ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முடிவினை தொடர்ந்து பன்னாடுகளுக்கு மேலும் அழுத்தங்களை கொடுத்து விடுதலை போராட்டத்தினை தொடர உலகமெங்கும் பரந்துவாழும் தமிழினம் உழைக்கவேண்டும்.

சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப்படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது இதனை தொடர்ந்தும் உலகத்தமிழினம் விடுதலை போராட்டத்தினை வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது.
அண்மையில் டப்ளின் தீர்ப்பு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு மனித உரிமை மீறல் என்ற அளவில்தான் நடைபெற்றது.இனஅழிப்பென்று சொல்லவில்லை  இன்று ஜொ்மனியில் அதே தீர்ப்பாயத்தில் தமிழீழத்தில் நடைபெற்றது நடைபெற்றுக்கொண்டிருப்பது இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று அது இனஅழிப்பு நடவடிக்கைதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

ஐ.நாவின் அறிக்கையில் கூட ஒருஇடத்தில் கூட இனப்படுகொலை என்ற சொல் இடம்பெறவில்லை அங்கு நடைபெற்றவை ஒரு போர்க்குற்றம் என்றுதான் ஜ.நா மன்ற ஆய்வறிக்கை கூறியது.அதனை தொடர்ந்து ஜ.நாவின் மனித உரிமைகுழுவிலும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது மனித உரிமை மீறல் என்றும் தெரிவித்த அவர்
இனஅழிப்பு என்ற சொல் எந்த இடத்திலும் குறிப்பிட வில்லை இது எமது போராட்டத்தை சிறுமைப்படுத்துவது கொச்சைப்படுத்துவது என்று நான் பல இடங்களில் சொல்லிஇருக்கின்றேன் இனஅழிப்பு என்பதை உலகம் சொல்ல வேண்டும் உலகம் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் அந்த நாள் வரவேண்டும் 62 ஆண்டுகள் அந்த மண்ணில் நடைபெற்றது இனஅழிப்பு தான் அதாவது தொடரான இனஅழிப்பு நடவடிக்கை என்றும் நான் சொன்னேன்.

அந்த மண்ணில் சிங்களவன் தமிழனை அழிக்கின்றான் இதனை மிக மிக கவனத்துடன் ஆய்வு செய்து ஜொ்மனி தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது 11 போ் நீதிபதியாக இருந்து தீர்ப்பினை சொல்லியிருக்கின்றார்கள் 30 போ் சாட்சியம் ஆகியுள்ளார்கள்.அதில் போதுமான சான்றுகள் கிடைத்துள்ளன அதன் பிறகுதான் தீர்ப்பாயம் சொல்லியுள்ளது முள்ளிவாய்க்காலுக்கு முன்பும் இனஅழிப்பு நடைபெற்றது முள்ளிவாய்க்காலிலும் இனஅழிப்பு நடைபெற்றிருக்கின்றது முள்ளியாவாய்க்காலிற்கு பிறகும் இனஅழிப்பு தொடர்கின்றது என்று உறுதியாக சொல்கின்றது என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...