தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் பிரார்த்தனையால் மறு பிறவி எடுத்துள்ளேன்! முதல்வர்

201611132052291179_pray-of-the-people-taking-the-reincarnation-jayalalithaa_secvpfதமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது அவரது உடல்நலம் குணமடைந்து விட்டது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனது கைப்பட முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘‘மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவு எடுத்துள்ளேன். இறைவனின் திருவருளால் நலம் பெற்று திரும்புவேன். ஓய்வு நான் அறியாதது. உழைப்பு என்னை நீங்காது. மக்களின் பேரன்பு இருக்கும்போது எந்த குறையும் எனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்புவேன். வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன்’’ என்றார்.

Comments
Loading...