Designed by Iniyas LTD
மடு ஆலயத்தின் மேல் சிறிய ரக விமானம்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவனி மாத திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றுக்கொண்டிருந்த போது பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதியில் மேலே வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து திரிந்ததை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த சிறிய ரக விமானத்தின் மேல் பகுதியில் நான்கு சக்கரங்கள் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் குறித்த விமானம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தியே சுற்றிக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியாதாக இருந்தது.
இரைச்சலுடன் சுற்றிக்கொண்டிருந்த குறித்த விமானம் மடுத்திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த சிறிய ரக விமானம் எதற்காக ஏவப்பட்டது, யாரால் ஏவப்பட்டது என்ற விடையம் இது வரை தெரியவில்லை. மக்கள் அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒளிப்படம் எடுப்பவர்கள் இதனை செய்திருக்கலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள்.