தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் நவராத்திரி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து தாதியர் பணிப்புறக்கணிப்பு…

மட்டக்களப்பில் தாதிய கல்லூரி மாணவர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களுக்கு நவராத்திரி விழா கொண்டாட போதனாசிரியர்  தடை விதித்தமையினை  கண்டித்தே அவர்கள் இந்த  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை  குறித்த    போதனாசிரியர் கொழும்பிற்கு மாற்றம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...