Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று மட்டக்களப்பு நகர மணிக்கூட்டக் கோபுரத்தின் அருகே நடத்தினர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,300 வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில் பல்வேறுபட்ட கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தி தங்களது கோரிக்ககைகள் அடங்கிய மகஜர்களை அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எதுவித பலனும் கிடைக்கவில்லை எனவும் மீண்டும் அதை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
தொடர்புடைய பதிவு
கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய வாக்குறுத்திக்கமைவாக 2016.03.31 ஆம் திகதிக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும், 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனத்தில் முன்னுரிமையளிக்க வேண்டும், நியமனங்களுக்கான போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகள் என்பன இன விகிதாசார அடிப்படையில் இல்லாமல் ஆண்டு அடிப்படையில் வழங்க வேண்டும், கிழக்கு மாகாண முதலமைச்சர் 2500 ஆசிரியர்கள் வெற்றிடமும், 250 திணைக்கனளங்களில் வெற்றிடமும் இருப்பதாக கூறிய போதும் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த கால போர் மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். தங்களது மனக்குறைகள் அடங்கிய கோரிக்கைகள் கொண்ட மகஜர்களை அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.