Designed by Iniyas LTD
மட்டக்களப்பில் 15 வயது சிறுவனை காணவில்லை
மட்டக்களப்பு களுவன்கேணிக் கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலைச் சிறுவன் ஒருவனை காணவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சந்திரகுமார் சதீஸ்குமார் என்ற மாணவனே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.