Designed by Iniyas LTD
மட்டக்களப்பு செங்கலடியில் உயர்தர மாணவியை காணவில்லை
மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பத்து நாட்களாக காணவில்லையென ஏறாவூர் காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை உப்போடை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி கடந்த மாதம் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு அதிகாலை நேரம் வீட்டிலிருந்து சென்றுள்ளார். தனவந்தர் ஒருவரது உதவியுடன் தான் உயர் கல்வியைத் தொடரப் போகிறேன். ஐந்து வருடங்களின் பின்னரே வீடு திரும்புவேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்