Designed by Iniyas LTD
மட்டு ஏறாவூரில் ரயில் மோதி பெண் பலி!
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (30) காலை 06.10க்கு புறப்பட்டுச் சென்ற உதயதேவி புகையிரதத்தில், மாவடிவேம்பு கிராம அபிவிருத்தி சங்க வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான கணபதிபிள்ளை ரன்சிதமலர் (வயது 35) என்பவர் தேவபுரம் பகுதியில் வைத்து மோதுண்டு உயிரிழந்துள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த அப்பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு உயிரிழந்துள்ளார்.
இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் ஸ்ரீ பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.