Designed by Iniyas LTD
மட்டு-வாகரையில் யானை தாக்கி விவசாயி பலி
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் யானை தாக்கி, விவசாயி ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளாரென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரையைச் சேர்ந்த 56 வயதுடைய விவசாயியான கதிர்காமன் சின்னத்தம்பி என்பரே உயிரிழந்தவராவார்.
வாகரை, பட்டிமுறிப்பு வயலில் வேளாண்மை நடவடிக்கைக்காக சென்றபோதே, யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி, இவ்விவசாயி உயிரிழந்துள்ளாரென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், வாகரை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது