தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மதக் கலவரங்களை தடுக்க வேண்டும் : மத்திய அரசு அறிவுறுத்தல்

religionமதக் கலவரங்களை தூண்டும் முயற்சியை உடனடியாக தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

 இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மத உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இரும்புக்கரம் கொண்டு தடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

 பசு இறைச்சி சாப்பிட்டதாக கூறி உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 இந்த சூழலில், மதக் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

Comments
Loading...