Designed by Iniyas LTD
மதச்சார்பின்மை குறித்த ராஜ்நாத் சிங்கின் பேச்சு பொருளற்றது :முன்னாள் தலைமை நீதிபதி ரஜிந்தர் சச்சார்
மதச்சார்பின்மை என்ற சொல் மிகவும் தவறாக பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதற்கு டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஜிந்தர் சச்சார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத்தின் பேச்சு பொருளற்றது என ரஜிந்தர் சாடியிருக்கிறார். பீகார் தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பின்னரும் பாரதிய ஜனதா கட்சியினர் பாடம் கற்றுக் கொள்ளாதது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக முன்னாள் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, அதன் முன்னுரையில் சமத்துவம் மதச்சார்பின்மை என்கிற வார்த்தைகள் சேர்க்கப்படவில்லை என ராஜ்நாத் கூறியிருப்பதை ரஜி்ந்தர் விமர்சித்துள்ளார்.
அந்த வார்த்தைகள் அரசியலமைப்பு முகவுரையில் எப்போது சேர்க்கப்பட்டன என்பது கேள்வி அல்ல என்றும் அவை அரசியலமைப்பின் ஒரு பகுதியா? இல்லையா? என்பதுதான் பிரச்சனை என்றும் ரஜிந்தர் சச்சார் குறிப்பிட்டுள்ளார்.