தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மதுபோதையில் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளிய பலாலி பொலிசார்..

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது வீதியால் பயணித்த பெண் ஆசிரியர் ஒருவரையும் மோதித்தள்ளியுள்ளனர்.

இதன்போது வீழ்ந்த இரு பொலிசாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது போதையில் இருந்த இருவரும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பணிபுரியும் சிங்களமொழி தாதியர்கள் உதவ முற்பட்டபோதும் அவர்களையும் தகாத வார்த்தையினார் ஏசியுள்ளனர்.

மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தொடர்ந்தும் மதுபோதையில் வைத்தியசாலை விடுதியிலும் குழப்பம் விளைவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...