Designed by Iniyas LTD
மதுரையில் தொடங்கியது 10-வது புத்தகக் கண்காட்சி!
10-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. தென்னிந்திய புத்தக கண்காட்சியை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.
வருகின்ற செப்டம்பர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் 260 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 3 கோடி ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புத்தக கண்காட்சியை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.