Designed by Iniyas LTD
மத்திய மந்திரி கட்காரியின் வீட்டின் படுக்கை அறையில் ஒட்டுக் கேட்கும் கருவி
மத்திய மந்திரி கட்காரியின் வீட்டின் படுக்கை அறையில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தொடர்பிருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட மந்திரி நிதின் கட்காரியோ சர்ச்சைக்குரிய இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார்.
தனது வீட்டின் எந்த பகுதியிலும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கட்காரி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் இணை மந்திரி கிரன் ரிஜ்ஜி ஆகியோர் கூறியது குறிப்பிடத்தக்கது.