Designed by Iniyas LTD
மத்திய லண்டனில் தீவிரவாதிகளால் கத்திக்குத்து தாக்குதல்! பெண் பலி ஐவர் படுகாயம்
மத்திய லண்டனில் புதன்கிழமை இரவு நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் நிலை பற்றி இன்னமும் தெரியவில்லை. லண்டன் Russell சதுக்கத்தில் பலர் கூடியிருந்த சமயத்தில் இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் நேரில் பார்த்த நபர் கூறுகையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதாக கூறினார். தற்போது லண்டன் முழுதும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என போலீசார் கூறியுள்ளனர்.


