தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனின் வயிற்றில் இருந்து 122 ஆணிகளை அகற்றிய மருத்துவர்கள்…

எத்தியோப்பியா நாட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்றுப்பகுதியில் இருந்து சுமார் 122 ஆணிகளை நீக்கப்பட்டுள்ளமை  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, அவரது வயிற்றுக்குள் சுமார் நூறுக்கும் மேற்பட்ட ஆணிகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பில், குறித்த  மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே கூறியபோது, குறித்த நபர்    கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

எனினும் அவர் மனநலம் பாதிப்பு தொடர்பான மருந்துகளை அவர் கடந்த 2 ஆண்டுகளாக உட்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு அந்த காலத்தில் அவர் ஆணிகளை விழுங்கியுள்ளதோடு,. உடைந்த கண்ணாடி துண்டுகளையும் அவர் விட்டுவைக்கவில்லை எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். .

அவரின்  வயிற்றில் இருந்த ஆணிகள்  ஒவ்வொன்றும் 10 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருந்ததாகவும்,  அதிர்ஷ்டவசமாக ஆணிகள் எவையும் அவரது வயிற்றை கிழிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது  குறித்த நபர்  குணமடைந்து  வருவதாகவும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தாவித் தியாரே  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...