தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவியிடம் கடத்தல் நாடகமாடிய கணவர் சிறையிலடைப்பு!

தன்னைகடத்தியதாக பொய் கூறி, மனைவியிடமிருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர், களுத்துறைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.    கடந்த 5ஆம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை மேற்கொண்டதாகவும் பெண் ஒருவர், களுத்துறை தெற்குப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் 30 இலட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் கப்பமாகக் கோரியதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.    இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரே கப்பம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.     சந்தேக நபர், இதற்காகப் பிறிதொரு நபரின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.     இவரைக் கைதுசெய்த களுத்துறை தெற்குப் பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...