தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனைவியை கொன்று தற்கொலை நாடகமாடியவர் கைது!

e70df16a-4750-4a5b-8e32-3a0388d59251_S_secvpf.gifசென்னை திருவான்மியூர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 23). இவருடைய மனைவி சூரியா(19). இவர்கள் இருவரும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூரியா, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

சூரியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கிலியால் கழுத்தை இறுக்கியதால் சூரியா இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் ஆனந்தை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், தாலி சங்கிலியால் சூரியாவின் கழுத்தை இறுக்கியதாகவும், இதில் அவர் வலிப்பு வந்து இறந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து திருவான்மியூர் போலீசார் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய ஆனந்தை கைது செய்தனர்.

Comments
Loading...