Designed by Iniyas LTD
மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் தானும் தற்கொலை
வவுனியாவில் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்தி விட்டு, தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு 11.30 மணியளவில் வவுனியா மகாறம்பைக்குளத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வே.ராமச்சந்திரன் (வயது-65), இவரது மனைவியான ரா.கிருஸ்ணவேணி (வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியை வெட்டிக் காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர்.
