தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புதிய ஜனாதிபதி மைத்திரி

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் அடிப்­ப­டையில், பொலிஸ் துறையின் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு, புல­னாய்வுப் பிரிவு மற்றும் படைத்­த­ரப்பு முகாம்கள் ஆகி­ய­வற்றில் சந்­தே­கத்தின் கார­ண­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தடுப்பு காவல் கைதி­களின் பெயர் விப­ரங்­களை தரும்­படி ஜன­நா­யக மக்கள் முன்­னணி  தலைவர் மனோ கணேசன், நேற்று தேசிய நிறை­வேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.mano

நேற்று காலை நிறை­வேற்று சபை கூடி­ய­போது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்­கையின் அடிப்­ப­டையில், இலங்கை முழுவதும் சிறை­ச்சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தடுப்பு காவல் கைதி­களின் விப­ரங்கள் சபையில் சமர்­பிக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் அடிப்­ப­டையில், பொலிஸ் துறையின் பயங்­க­ர­வாத தடுப்பு பிரிவு, புல­னாய்வுப் பிரிவு மற்றும் படைத்­த­ரப்பு முகாம்கள் ஆகி­ய­வற்றில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தடுப்பு காவல் கைதி­களின் விப­ரங்­க­ளையும் தரும்­படி மனோ கணேசன் கோரினார். இந்த கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த தக­வல்­க­ளையும் பொலிஸ் மற்றும் பாது­காப்பு அமைச்­சு­க­ளி­ட­மி­ருந்து பெற்று சபைக்கு சமர்­ப்பிக்­கும்­படி, தேசிய நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு பணிப்புரை விடுத்தார்

Comments
Loading...