தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் இராணுவத்தின் ரோந்து – பீதியில் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் திடீரென இராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதியுணர்வு ஏற்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் இலங்கையில் புலிகள் மீள அணிதிரள வாய்ப்பிருப்பதாக இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது. இந்தநிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.army patrol in Mannar

இதனிடையே மன்னார் மாவட்டத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு வேளைகளில் இரணுவம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...