தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே ஒன்றாக இணைந்த மனித எச்சங்கள் ..

மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய வளாகத்தில்,  மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்பட்டு  வந்த நிலையில், நேற்றைய முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே ஒன்றாக இணைந்து காணப்பட்டுள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வபகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  மேலும் அங்கு  மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணி இடம்பெற்று வருகின்ற நிலையில், விரிவிபடுத்தப்பட்ட இடங்களில்  மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் ச.தொ.ச விற்பனை நிலைய கட்டுமானப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து, அது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு  அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில்  குறித்த பகுதியில்  இதுவரைக்கும் 40இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு ,27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  பெண்கள் கைக்கு அணியக்கூடிய  தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...