Designed by Iniyas LTD
மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை அகழ அமைச்சரவை அனுமதித்துள்ளது
மன்னார் கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை அகழ்வதற்காக சர்வதேச கேள்வி மனு கோர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் எரிவாயு அகழ்வு மேற்கொண்டு வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யவும் உற்பத்தி செய்யவும் இதனூடாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தகுதியான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினூடாக இணக்கப்பாட்டு குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கி யுள்ளது.
அமைச்சர் சம்பிக ரணவக்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளையும் திட்டத்தையும் அமைக்கவும் பயன்மிக்கவாறு அதனை செயற்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.