தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த கேரள கஞ்சா…

மன்னார் கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்றினை iஇலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 284 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த கேரள கஞ்சா தொகை கடற்படையால் முழங்காவில்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடல் மார்க்கமாக  கடத்தலில் ஈடுபடும் நபர்களால் குறித்த கேரள கஞ்சா  கடலில் விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...