Designed by Iniyas LTD
மன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்த மீனவர் பலி…
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று அதிகாலை மணியளவில் பள்ளிமுனை கடலுக்கு பிடிக்க சென்றுள்ளனர்.
இதன்போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த மர்மப் பொருளை எடுத்த போது குறித்த பொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,,
ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் குறித்த மர்மப்பொருளை எடுத்து படகினுள் வைத்து சோதனைக்கு உற்படுத்திய போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் அவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.
மேலும் குறித்த படகில் இருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ (வயது-35), எம்.அகஸ்ரின் பிகிராடோ(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்ததோடு,அந்தோனி பிகிராடோ (வயது-39) என்பவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.