தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் சதொச வளாக  மனித எச்சங்கள் ஆய்விற்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி….

மன்னார் சதொச கட்டட வளாகத்தில்  மீட்கப்பட்ட  மனித எச்சங்களை ஆய்வுக்குட்படுத்துவதற்காக, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகவலை மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வழிநடத்தும் மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியது என்பதை ஆய்வு செய்வதற்கான  அவை  காபன் சோதனைக்காக  அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து, அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வு நிறுவகத்திற்கு மனித எச்சங்களின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 185 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச கட்டட நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித புதைகுழி அடையாளங் காணப்பட்டமை நினைவில்கொள்லத்தக்கது.

Comments
Loading...