Designed by Iniyas LTD
மன்னார் தல்லாடி பகுதியில் சிங்கள குடியேற்றங்களுக்காக காணி சுவீகரிப்பு
மன்னார் தல்லாடி பகுதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக 50 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இந்த பகுதியில் கடற்படையினர் குறித்த காணிப் பிரதேசம் தங்களுக்குரியது என்று அறிவித்தல் பலகையை வைத்துள்ளனர்.
இது சிங்களவர்களின் குடியேற்றத்துக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற மன்னார் வாசிகளை குடியேற்றுவதற்கு காணி இல்லாத நிலைமை காணப்படுகிறது. எனினும் சிங்கள படையினர் இவ்வாறான காணி சுவீகரிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.