தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் நானாட்டானில் ஆணின் சடலம் மீட்பு

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையோரப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் இன்று 03/09/2014  புதன்கிழமை காலை  மீட்கப்பட்டுள்ளதாக மன்னாரில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று 03/09/2014 புதன்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு வங்காலை சிறீலங்கா காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

Untitled

இந்த நிலையில் வங்காலை சிறீலங்கா காவல்துறையினர் மன்னார் சிறீலங்கா காவல்துறைக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் சிறீலங்கா காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் வங்காலை சிறீலங்கா கடற்படை முகாமில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம் நீல நிற முழு ஆடையுடனும், உள்ளாடையுடனும் கரையொதுங்கியுள்ளது. அருகில் முழு நீல காட்சட்டையும் காணப்படுகின்றது. குறித்த சடலம் யார் என இது வரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த சடலத்தை மன்னார் சிறீலங்கா காவல்துறை நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன நேரில் சென்று பார்வையிட்டார்.

பின் மதியம் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், சிறீலங்கா காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு அமைவாக சடலத்தை அடையாளம் காண்பதற்காக இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பாக வைத்தியசாலையில் வைக்குமாறு சிறீலங்கா காவல்துறைருக்கு திடீர் மரண விசாரனை அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை உத்தரவிட்டுள்ளளார்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மன்னார் சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...