தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் புதைகுழி ஒரு சுடுகாடு என்கிறது தொல்பொருள் திணைக்களம்!

eadu

மன்னாரில் அண்மையில் மனிதஎச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட இடம் ஓர் சுடுகாடு என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மன்னாரில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மனித புதைகுழியிலிருந்து 84 பேரின் மனித உடற் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்த சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் பாரிய மனித புதை குழி அல்ல எனவும் அந்த இடம் ஓர் சுடுகாடு எனவும் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த அமைப்பு மற்றும் மண்ணின் கட்டமைப்பு ஆகியவற்றை கருத்திற் கொள்ளும் போது இது ஓர் சுடுகாடாக இருந்திருக்க வேண்டுமென தொல்பொருள் திணைக்களம்! சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பெட்டிகளில் இட்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருக்காது. அநேகமான சடலங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவை. சில சடலங்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவை. 1936-1938ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் சில பகுதியில் நிலவிய மலேரிய காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களாகவும் இவை இருக்கக் கூடும். எனினும், இந்த மனித உடற் பாகங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை தற்போதைக்கு வெளியிட முடியாது என தொல்பொருள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை நடாத்தியதன் பின்னரே சரியான தகவல்களை வெளியிட முடியும் என தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments
Loading...