Designed by Iniyas LTD
மன நலம் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு லண்டனில் 10 மாத சிறை!
பிரித்தானிய புகையிரதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்த மன நலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சுரேஸ்குமார் துரைராஜா என அழைக்கப்படும் குறித்த நபர் (44) கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி லிவர் லைம் வீதி புகையிரத நிலையத்துக்குள் பிரவேசித்தபோது, புகையிரத நிலைய பரிசோதகர் அவருடைய பயணச் சிட்டையக் காண்பிக்குமாறு கோரினார்.
இதன்போது, பயணச்சீட்டு எதனையும் வைத்திருக்காத குறித்த நபர் தான் புகையிரதத்தினுள் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்போவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து பிரித்தானியக் காவல்துறையினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சுரேஷ் குமாரைப் பரிசோதித்த காவல்துறையினர் அவரிடம் தாக்குதல் நடாத்துவதற்கான எந்தவொரு ஆயுதங்களும் இருக்கவில்லை.
அவர் புகையிரதத்தின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளவே அங்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இதன்போது சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொள்ளுமாறு தனது தலையில் ஒரு குரல் கட்ட
ளையிட்டதாக தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகளுக்காக இலங்கையில் இவர் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவரைக் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இலங்கையில் அவர் சந்தித்த.பயங்கரமான நிகழ்ச்சிகளால் அவர் மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
பிரித்தானியாவில் இதற்கு முன்னர் வேறு எந்தக் குற்றச்சாட்டிலும் கைதுசெய்யப்படாத சுரேஸ்குமார், தானாக முன்வந்து பல தொண்டுப்பணிகளை ஆற்றியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது வழக்கை விசாரித்த லிவர்பூல் நீதிமன்ற நீதிபதி அனில் முர்ரே, சுரேஷ்குமாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விடவும் அந்த அச்சுறுத்தல் அங்கு பீதியும் பதற்றமும் ஏற்படக் காரணமாகவிருந்ததாக தெரிவித்து அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.