தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மயக்கமுற்று வீழ்ந்த மகிந்த

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள ஜனவரி எட்டாம் திகதியிலேயே முன்னாள் பிரதமரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் பிறந்த தினமும் வருகிறது. இது மகிந்தராஜபக்ஷவின் வெற்றிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மகிந்தராஜபக்ஷ முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை.mahinda_rajapaksa

இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு இது குறித்து மகிந்தராஜபக்ஷ அறிந்த போது மயக்கமுற்று வீழ்ந்ததாக ஜனாதிபதி மாளிகையின் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அவர் அப்பலோ வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்பட்டு, சில மணித்தியாலங்களில் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் வெளியேறி எதிர்கட்சிகளுடன் இணைந்து வருகின்ற நிலையில், இந்த விடயம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...