தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மயமான விமானம் குறித்து தகவல் ஏதும் இல்லை

சென்னையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு அந்தமான் சென்றபோது மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தில் பயணம் செய்த தமிழக வீரர் உள்ளிட்ட 29 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதனிடையே, மாயமான விமானப்படை விமானத்தை கண்டுபிடிக்க இஸ்ரோவிடம் உதவி கோரப்பட்டு இருந்தது.  Missing-IAF-Plane

இந்நிலையில், இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த புகைப்படங்களில் விமானம் குறித்த சிக்னல் எதுவும் கிட்டவில்லை.  இது தொடர்பாக மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “உள்நாட்டு செயற்கைக்கோள்கள் சில புகைப்படங்களை அளித்துள்ளன. மாயமான கருதப்படும் குறிப்பிட்ட இடத்தில் கப்பல்களும் தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.  இயந்திரப் பகுதிகளுக்கான விரை புடை பெயர்ப்புக்கருவி மூலமும் எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Comments
Loading...