தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பேருந்து ஓட்டுநர் பலி

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரியில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பேருந்து ஓட்டுநர் உடல் சிதறி உயிரிழந்தார்.  bus

நாட்றம்பள்ளி அருகே பாரதிதாசன் தனியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளேரிபட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தற்காலிக ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் அவர் முகம் கழுவுவதற்கு சென்றதாக தெரிகிறது.   அப்போது திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்  ஓடிச் சென்று பார்த்த போது, காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார்.   இதில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்து வெடித்ததாக தகவல் பரவியது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பேருந்து கண்ணாடிகள் உடைந்தன. தகவல் அறிந்து, தொகுதி எம்எல்ஏவும், பள்ளிகல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி, கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.   இதில் வானில் இருந்து மர்மபொருள் எதுவும் விழவில்லை என்றும், அருகில் உள்ள குப்பை தொட்டில் இருந்து மர்ம பொருள் வெடித்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Comments
Loading...