Designed by Iniyas LTD
மறப்போம் மன்னிப்போம் என்று கூறுபவர்களுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் – சிவகரன்
முன்னாள் இணைந்த வடக்கு கிழக்கின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அண்மையில் கூறியிருந்த மறப்போம் மன்னிப்போம் என்ற கூற்றும் கடந்த காலத்தில் இந்த ஆயுதக் குழுக்கள் எவ்வாறான தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் அவர்களெல்லாம் போராடினார்கள் தியாகம் செய்தார்கள் என்ற கூற்றும் வேடிக்கையாக இருக்கிறது என தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் மன்னார் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வேடிகையான கூற்றை அவர் தமிழ்த் தேசிய அரசியலுக்கு துரோகம் செய்ததை மறைப்பதற்கு சொல்கிறார் ஆகவே இவர்கள் யாரும் தியாகிகள் இல்லை பல வருடங்கள் இந்திய அரசின் அனுசரணையுடன் இருந்துவிட்டு போர்க்குற்றவாளி இனப்படுகொலையாளி சேர்ந்து மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வதற்கு எந்த விதமான தார்மீக உரிமையும் கடமையும் பொறுப்பும் தமிழ்மக்கள் சார்பாக தெரிவிப்பதற்கு கருத்து கூறுவதற்கு இல்லை ஏனெனில் இவர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு துரோகம் செய்தவர்கள் அந்த துரோகம் செய்த அரசியல் பின்னணியை கொண்டுள்ளவர்கள் தங்களை மன்னியுங்கள் என்று சொல்வது மிக வேடிக்கையானது எனவும் தெரிவித்திருந்தார்.
வேடிக்கை பார்த்த இவர் சொல்கின்ற போராடினார்கள் என்று சொல்பவர்கள் கூட கடந்த காலத்தில் இவ்வாறான துரோகங்களையும் காட்டிக் கொடுப்புகளும் கூட்டிக் கொடுப்பதையும் தமிழ் மக்களுக்கு செய்தார்கள் என்பதையும் நாங்கள் மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது தமிழ் மக்கள் வரும் தேர்தல்களில் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பது வரதராசப் பெருமாள் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.