Designed by Iniyas LTD
மறைக்கப்பட்ட தமிழினத்தின் வரலாறு …… 3ம் பாகம்
இலங்கையில் பௌத்த பெரும் வளர்ச்சியும் சிங்கள மொழி உருவாக்கத்தின பின்னணி
கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் இருந்தது பௌத்தத்தை தழுவியோர் மற்றும் பௌத்தத்தை தழுவாத சைவ மக்கள் இடையிலான மதம் முரண்பாடு அன்றி இனங்களுக்கு இடையிலான முரண்பாடு இல்லை. அன்று இருந்தது ஒரு இனம் அது தமிழினமே.
கி.மு 3 ஆம் நூற்றாண்டு அசோக சக்கரவர்த்தியின் பேர் அரசின் கீழ் பௌத்தம் பெரும் வளர்ச்சி கண்டு இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் அசையா நிலைத்து நின்றது.
தமிழ் நாட்டிலும் பௌத்தம் பேர் வளர்ச்சி கண்டு இருந்தது . பௌத்தம் இந்தியா முழுவதும் பேரழுச்சி கொண்ட காரணம் மிக எளிமையான மக்களிடம் எடுத்துச் சென்றதே.
மௌத்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராது எக்குடியிற்பிறந்தோராயினும், அனைவருக்கும் கல்வி அறிவு. அறிவில் சிறந்தோர் பௌத்தக் கொள்கைப்படி ஒழுகுவாராயின் மதகுருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மைகொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிகளால் பிளவுற்றிருந்த தமிழர்கள் இந்த மதத்தை தழுவி கொண்டனர்.
பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப்பெற்றிருந்த வரலாற்றை சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களில் மூலம் அறியலாம்.
தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த
அரசர், வணிகர், செல்வந்தர்
முதலானவர்களின்
பொருளுதவி பெற்றுவிகாரைகளையும்,
பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள்.
மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம்
வரும்ப பிணியாளர்களுக்கு
இலவசமாக மருந்துகொடுத்துத்
தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும்
தமது பள்ளிகளில் பாடசாலைகளைஅமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையும் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரியநன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்குஅழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச்செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்’ புத்த சரித்திரம்
முதலான நூல்களை
ஓதிப் பொருள்சொல்லியும் மக்களுக்கு மதபோதனைசெய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவுகொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள்.
இவ்வளவு செழிப்புடன் வளர்ச்சி பெற்று இருந்த பௌத்த மதம் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் மறைந்து போனது எப்படி அதனால் இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் என்ன?
தொடரும்……….