Designed by Iniyas LTD
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி பொது சந்தை வர்த்தகர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு, கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது, பொதுச்சந்தை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டன. மேலும், அஞ்சலி நிகழ்வில் பொதுச்சந்தை வியாபாரிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு காலமானமை குறிப்பிடத்தக்கது.