Designed by Iniyas LTD
மலாவியில் இடைவிடாது பெய்யும் கனமழையால் 23 பேர் பலி…
ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுடன் செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.
இதேவேளை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த வாரம் வரை அங்கு மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
