Designed by Iniyas LTD
மலேசிய விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுடப்பட்டுள்ளதாம்!
மலேசிய எம்.எச். 17 விமானமானது உக்ரேனிய போர் விமானமொன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கான புதிய சான்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. மேற்படி போயிங் 777 விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கிழக்கு உக்ரேனுக்கு மேலாக வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் மேற்படி விமானம் உக்ரே னிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்தவர்களால் பிரித்தானிய பிபிசி ஊடகத்தில் வெளியான புதிய ஆவணப்படத்திற்கு அளிக்கப்பட்ட தகவல் கள் அந்த விமானம் உக்ரேனிய போர் விமானமொன்றாலேயே சுட்டு வீழ்த்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கின்றன.