Designed by Iniyas LTD
மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக உடையார் கட்டு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…
முல்லைத்தீவு உடையார்கட்டுப்பகுதியினை சேர்ந்த குறுஞ்சி மக்கள் முன்னேற்ற கழகம் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த ஆர்ப்பாடம் நேற்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான பேரணியில் குறுஞ்சி மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதுடன்.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.சுதர்சன், ஆ.ஜோன்சன்,திரு.சுகந்தினி. ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்.
புதிதாக வரவுள்ள அரசிடமும் மலைய மக்களின் அடிப்படை சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றினையும் அவர்கள் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை ம்குறிப்பிடத்தக்கது.
