தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மல்லாவி பாரதிநரில் யுவதி சடலமாக மீட்பு

மல்லாவி பாரதி நகர் பகுதியில் நேற்று மாலை கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் மீட்க்கப்பட்டு உறவினர்களால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட போது குறித்த யுவதி ஏற்க்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்த நிலையில் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.ded

இந்நிலையில் இன்று காலை முல்லை மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்டு சடலத்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனை செய்த பிற்பாடு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உறவினர்களிடம் சடலத்தை கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பாரதிநகரைச் சேர்ந்த பரராஜசிங்கம் ரஜனகா (வயது 25) என்ற யுவதியேயாவார் . அத்துடன் இது கொலையா? தற்கொலையா? என சந்தேகமும் நிலவுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Comments
Loading...