தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாகாண சபை தேர்தல் மிக விரைவில் – ஜனதிபதி அறிவிப்பு..

மாகாண சபை தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் இன்று நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்தைகளை நடத்தி, மாகாண சபை தேர்தல்களை மிக விரைவில் நடத்த  நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...